பேரன்புகொண்ட தமிழ் மக்களே!
*யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல்*
*இனிதாவது எங்கும் காணோம்*
சவூதி தமிழ் கலாச்சார மையம் வருகின்ற டிசம்பர் 5 ம் தேதி தம்மாம் நகரில் தாய் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் நகைச்சுவை பட்டிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்களின் உழைப்பா ? பெண்களின் பொறுப்பா? என்கிற தலைப்பில் தமிழ் நட்சத்திர புகழ்
பேராசிரியர் *முனைவர் கு.ஞானசம்பந்தன்* அவர்கள் நடுவராக பங்கேற்கிற்கிறார்
உழைத்துக் களைத்து போகும் ஆண்கள் தான் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் என *பட்டிமன்ற புகழ் திரு பழனி* அணித் தலைவராக பங்கேற்கிறார்
பெண்கள் நாட்டின கண்கள் மட்டுமல்ல
பெண்களின் பொறுப்பு தான் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் என உங்கள் நெஞ்சம் நிறைந்த *சின்னத்திரை நயன்தாரா என்கிற அறந்தாங்கி நிஷா* அவர்கள் பெண்கள் அணியின் தலைவியாக பங்கேற்கிறார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள *அனுமதி இலவசம்,*
=====================
1. இலவச அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ள இணைக்கப்பட்டுள்ள லிங்க்கில் உங்கள் தகவல்களை பூர்த்தி செய்த உடன் QR code கொண்ட அனுமதி சீட்டு உங்களது Email க்கு அனுப்பப்படும்
2. நிகழ்ச்சி நடைபெறும் இடம் அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது
3. 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் இலவச அனுமதி சீட்டு வேண்டும்.
4. மிக குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன ஆகவே முதலில் பதிவு செய்வோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
*இலவச அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ள:*
https://sauditamilculturalcenter.zohobackstage.sa/Pattimandram