Ma. Venkatesh
பிராணா அக்குபஞ்சர் கண்டனூர். 8220079993
மனிதனின் வாழ்வை பாதிக்கும் மன அழுத்தம்.
மனித வாழ்க்கையில் மன
நலம் என்பது ஒரு
முக்கியமான ஒன்றாகும். நம்
*மனம்* நன்றாக இருந்தால் அன்றைய நாள் மகிழ்ச்சி
நிறைந்ததாக இருக்கும். மனம் பாதிப்படைந்தால்
அன்றைய நாள் முழுவதும்
இருள் சூழ்ந்ததாக இருக்கும்.
*மன அழுத்தம்**
மன அழுத்தம் என்பது, மனதில் ஏற்படும் பதட்டம், பயம், கவலை, குழப்பம் போன்ற உணர்வுகளால் உருவாகும் ஒரு உள் மனநிலை. இது குறுகிய காலம் அல்லது நீண்ட காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மன அழுத்தம் மனிதரின் நினைவு, நம்பிக்கை,மன உறுதி, மற்றும் உடல் செயல்பாடுகளின் மீதும் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும்.
*மன அழுத்தத்தால் ஏற்படுத்தும் நோய்கள்:*
1. உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)
அதிகரித்து இதய நோய்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. வாதம் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.
2. உடல் வலி, தலைவலி அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடல் வலிமையை வலுவிழக்கச் செய்கிறது.
3. மன நோய்கள்
மன அழுத்தம் நீடித்தால் மனச்சிதைவு (Depression), பதட்டம் (Anxiety), தூக்கமின்மை (Insomnia) போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.
4.மருத்துவமனையின் நோய்கள்
வயிற்றுப்புண், இரைப்பை கோளாறுகள், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
மன அழுத்தத்தை போக்கும் வழிகள்:
தியானம் மற்றும் யோகா
தினசரி 10-15 நிமிடங்கள் தியானம் செய்வது மனதை அமைதியாக்கும்.
நேர்மறை சிந்தனைகள்
நம்மைச் சூழ்ந்த சூழ்நிலைகளை நேர்மறையாக பார்க்கும் பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
உடற்பயிற்சி
தினசரி நடைபயிற்சி அல்லது எளிய உடற்பயிற்சிகள் மனத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன.
மன அழுத்தம் என்பது நம்மால் உணர முடியாத அதே நேரத்தில் நம்மை மெதுவாகப் பாதிக்கும் ஒரு ஆபத்தான சக்தி. எனவே மன அழுத்தத்தைக் சீர்படுத்தும் வழிகளை நாம் தெரிந்துகொண்டு, நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்த்து கொள்ளவேண்டும் *மனம் நலமானால் வாழ்க்கை வளமாகும்*