நாம் நம் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பற்றியோ கோவில்கள்
பற்றியோ சொல்லி கொடுப்பதில்லை .
3 வயதிலிருந்தே பள்ளிகூடம்
ஆஸ்பத்திரி எனறு அலைகிறோம்
இறைவனையோ சமயத்தையோ நாம் சொல்லிகொடுப்பதில்லை
ஏன்என்றால் அது நம் குழந்தைகளின் பாடதிட்டதத்தில் இல்லை இருந்தால் அதற்க்கும் டிவிஷன் வைத்திருபார்கள்
அவர்களுக்கு தேவைபடும்போது அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும்என்று விட்டுவிடுகிறோம்.
முதலில் படிக்கட்டும் பின்பு நல்ல உத்யோகம் கிடைக்கட்டும்
என்று நமது சமயத்தை பற்றி தெரியாமல் வளர்த்து விடுகிறோம்
அவர்களும் 40 வயது வரும் போது நமதுசமயத்தில் உள்ள யோகம் ,அணுஷ்டானம்,
ஓழுக்கம் பற்றி தெரியாமல் வளர்ந்து விடுகிறார்கள்.
வசதி படைத்தவன் ஹடெக்சாமியார்களிடமும்
அப்பர் மிடில்கிலாஸ் கோவில் சிவாசாரியாகளிடமும்
லோயர் மிடில்கிலாஸ் ஜோஷயர்களிடமும்
ஏழைகள் குறிசொல்பவர்களிடமும் சென்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
நம் போன்றவர்கள்
நீங்கள் இறைவனை நம்புங்கள்
நித்தம் கோவில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினால்
உங்களால் முடிகிறதென்றால் "அது அவன் அருள் இருந்தால் தான் அவன் அருள் கிடைக்கும் என்று ஒரு ரெடிமேடான பதிலையே வைத்திருக்கிறாரகள்
இது திருவாசகத்தை பற்றி சரியாக அறியாததனால் வருவது
'சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
அவன் அருளாளே அவன் தாள் வணங்கி
இவர்கள் சிவனை சிந்தையில் வைக்காமல் எப்படி அவன் அருள் கிடைக்கும்
ஆகவே முதலில் உங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அடிக்கடி
அழைத்து செல்லுங்கள்
சிவன் வநாயகர் முருகர் பற்றிய புராணங்களை எளிமையாக கூறுங்கள்
7 வயது அல்லது 3ஆம் வகுப்பு படிக்கும் போது உழவாரப்பணி செய்ய அணுப்புங்கள்
திருமறைகளை பாடசொல்லுங்கள்
10-12 வயதுக்குள் திட்சை வாங்க சொல்லுங்கள்
14-21வயதுக்குள் சித்தாந்தம் பயிலசொல்லுங்கள்
இப்போது பாருங்கள் 22வயதில் உங்கள் மகனோ ,மகளோ ஏவ்வளவு தெளிவுடன் சிவகளையுடன் இருக்கிறார்கள்
என்று பாருங்கள்.