அன்பார்ந்த அகஸ்தியர் பீடத்தின் பக்த கோடிகளுக்கு பணிவான காலை வணக்கங்கள்
இன்று சில முக்கியமான தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்
இன்று ஜீவநாடி சுவடியில் நமது குருநாதர் அகத்தியர் ஐயா அவர்கள் ஆங்கில மாதம் ஜனவரி வருடம் 2026, 6ஆம் தேதி 06.01.2026, அன்று குருபூஜை நடத்துவதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்
இரண்டாவது தகவல் நமது கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே அகத்தியர் ஜீவநாடியில் கூறியபடி திருநீர் பச்சிலை இலைகள் சாற்றை கொடி மரத்தில் தடவி புனிதம் செய்யப்பட்டது. தற்போது சுமார் 500 கிலோ எடையுள்ள கல் பீடம் சிலை வடிவங்கள் செதுக்கப்பட்டு கொடிமரம் பிரதிஷ்ட்டை செய்யப்படும் இடத்தில் கொண்டு வந்து வைக்கப்பட இருக்கிறது.
இந்த கல் சிலை பீடம் செய்து கொண்டு வருவதற்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
பொதுமக்கள் தயை கூர்ந்து கொடிமர பணிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல குருபூஜை பந்தல் அமைப்பதற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. மேலும் அன்னதானத்திற்கு பூஜை செலவிற்கு என்று மேலும் 50 ஆயிரம் தேவைப்படுகிறது.
குருபூஜை செலவுகள் மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் என்பது தேவைப்படுகிறது.
எனவே பக்த கோடிகள் அனைவரும் கொடிமர பணிக்கும் மேலும் குருபூஜை பணிக்கும் உங்களால் முடிந்த பொருள் உதவியை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.