Search results for:
No result found! Try with different keywords!
Users
Organizers
Events
Advertisement
Oh Snap, this is a past event! 😵

Do you want to get notified when this event happens again?

Out of Syllabus - Find out the Businessman within You!

Advertisement

Out of Syllabus - Find out the Businessman within You!


'பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்' தொழில் முனைவோர்கள் மற்றும் புதியதாக தொழில் தொழில் தொடங்குவோருக்கான வெற்றியை உறுதி செய்யும், மனோதிடத்தை வளர்த்தெடுக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை.

நாள் : 05-01-2019, சனிக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : வெஸ்ட் இன் பார்க் ஓட்டல், ஏழும்பூர், சென்னை.


பொதுவாக நமது பள்ளி கல்லூரிகளில் பணம் குறித்தோ, செல்வ வளங்கள் குறித்தோ, தொழில்கள், வியாபாரம், இலாபங்கள் குறித்தோ, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ கற்றுத்தருவதில்லை. நல்ல மதிப்பெண், நல்ல வேலை, நல்ல சலுகைகள், நல்ல சம்பளம் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன. மாறாக எதார்த்த வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, நமது பள்ளியும், கல்லூரிகளும் கற்றுத்தரும் பாதையில் பயணிக்க பல சிக்கல்களை சந்திப்பதோடு, எப்போதும் ஒரு வித பய உணர்விலேயே இருக்க வேண்டியுள்ளது. சுதந்திர மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, எப்போதும் ஒரு வித இறுக்கத்தோடு இருக்க வேண்டியுள்ளது.

அதே வேலையில், பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, அனைவருக்கும் வேலை (அ) அரசாங்க வேலை என்பது மிகவும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆற்றல் உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தொழில்முனேவோர் மறைந்திருக்கிறார். அதை உணர்ந்திடவும், வெளிக்கொணரவும் - சற்றே மாற்றி யோசிக்கவும் இந்த பயிலரங்கம் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வருகிற ஜனவரி 5ம் தேதி சென்னை வெஸ்டின் பார்க் ஓட்டலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தொழில் முனைவோர் வளர்ச்சி பயிலரங்கம் நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சி பட்டறையில் கீழ்க்கண்ட பல்வேறு செய்திகள் பரிமாறபடவுள்ளன.

நாம் ஏன் சுயதொழில் முனைவோராக மாற வேண்டும்?
சுயதொழில் முனைவோராக இருப்பதன் அருமை பெருமைகள் என்ன?
சொந்த தொழிலில் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம்?
பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி?
உங்களுடைய இலக்குகளை அடைய உறுதியான வழிமுறைகள் என்னென்ன?
உறவு முறைகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது எப்படி?
வீண் அச்சங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சிகரமாக வாழ்வது எப்படி?
நாம் ஏன் தொடர்ந்து கடன்கள் வாங்குகிறோம்? கடன்களிலிருந்து விடுபடுவது எப்படி? கடன்கள் வாங்காமல் இருப்பது எப்படி?
நம்மை பொருளாதாரத்தில் வெற்றிபெற விடாமல் தடுக்கும், நம் ஆழ்மனதில் மறைந்திருக்கும் 3 முக்கிய தடைகள் என்னென்ன?
பணம்-பொருள் ஈட்டுவதற்கான உலகலாவிய அளவில் நடைமுறையில் உள்ள 4 முக்கிய வழிகள் & வழிமுறைகள் என்னென்ன?
ஏழை, நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள் இடையே உள்ள 101 முக்கிய வித்தியாசங்கள் என்னென்ன?
சொத்திற்கும், கடன்பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பயிற்சி கட்டணம்: ரூ.1500 மட்டும்
(மதிய விருந்து, 2 வேளை தேநீர், பயிற்சி புத்தகம் உட்பட)

பயிற்சி களம், இருக்கை, உணவு, பயிற்சி உபகரணங்கள் ஏற்பாடு செய்வது பொருட்டு நேரடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது. எனவே தாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். (பாதுகாப்பான பணபரிமாற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது)
Register Now
BONUSES:
இந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு கீழ்க்கண்ட வெகுமதிகள் இலவசமாக வழங்கபடுகிறது.
1) 100+ சுய முன்னேற்ற இ-புத்தகங்கள் வடிவில்
2) பாசிடிவ் பெருமாள் அவர்களோடு 1 மணி நேரம் 1-to-1 ஆலோசனை
3) ரூ. 5000 மதிப்புள்ள பயிற்சி சலுகைகள் மற்றும் கூப்பன்கள்
4) தொழில் தொடங்குவதற்கு தேவையான கடன் திட்டங்கள், அரசு மான்யங்கள் போன்ற ஆலோசனைகள் மற்றும் விவரங்கள் வழங்க சிறந்த ஆலோசகர்களின் தொடர்புகள்.
5) பயிற்சி முடித்தும் தொடர்ந்து 45-90 நாட்களுக்கு WhatsApp-ல் இலவச பயிற்சிகள் மற்றும் தொடர் குறிப்புகள்.
6) நெருப்பு பந்து விழுங்கும் அனுபவம் (விலை மதிப்பற்ற பயிற்சி)

பயிற்றுனர் குறிப்பு: பாசிட்டிவ் பெருமாள் ஒரு தொழில்முனைவோர் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சியாளர். விரைவில் வெளிவரவிருக்கும் 'Out Of Syllabus - The 12 Essential Life Skills that no school taught you' புத்தகத்தின் ஆசிரியர். முதுகலை தகவல்தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர். 17 வருடங்களாக, விற்பனை, மார்க்கெட்டிங், சாப்ட்வேர், இணையதளம் போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர். கடந்த 9 வருடங்களாக டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் தடம்பதித்து தொழில்முனைவோர்களுக்கு பல சேவைகளும், பயிற்சிகளும் வழங்கி வருபவர். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பல்கலைகழக மாணவர்களுக்கும் பல வகையான தொழில்முனைவு மனோதிட பயிற்சிகளை இலவசமாக வழங்கிவருகிறார். 2020க்குள் 1,00,000 தமிழக இளைஞர்களை - தொழில்முனைவு, சுயதொழில், வியபார சிந்தனை கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுவருகிறார்.



Liked this event? Spread the word :

Map Hotel Vestin Park, 39 Montieth Road Egmore, Chennai, India 600008, Chennai, India
Loading venue map..
Report a problem

Are you going to this event?

Advertisement